Tumblr: வலைப் பதிவினை இலகுவாக்குங்கள் வலைப்பதிவு என்பது எங்கும் எல்லோராலும் விரும்பப்படும் ஒரு விடயமாகும். நானும் ஏதாவது எழுத வேண்டும் என்று எம்மில் அதிகமானோர் எண்ணக்கூடும். அவ்வாறு எழுதவரும் அதிகமானோர் தொடர்ந்து வலைப்பதிவில் ஈடுபடுவதில்லை. அதற்கு முக்கியமான காரணமாக வலைப்பதிவு சேவைகளின் கடினத்தன்மையை குறிப்பிடலாம். அவ்வாறில்லாமல் tumblr இல் வலைப்பதிவானது மிகவும் இலகுவாக்கப்பட்டுள்ளது. இது tumblr ன் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.