அனைவரும் ஊகித்திருந்த விடயமே நேற்று அமெரிக்காவில் மேடையேறிருந்தது. அப்பிள் நிறுவனம் நேற்று ஒரு ஊடக சந்திப்பொன்றினை ஒழுங்கு செய்திருந்தது. அங்கு எல்லோரும் எதிர்பார்த்தபடி ஐ-பேட்-2 அறிமுகம் செய்யப்பட்டது.

ipad2 first

முற்று முழுதாக புதிய வடிவமைப்பில் இந்த ஐ-பேட் வெளிவந்துள்ளது. முன்னயதைவிட வேகம், முன்னயதை விட அழகு, முன்னயதைவிட துல்லியம், முன்னயதைவிட இன்னொரு கூட்டுப்பாகம் என்று மேடையினை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது இந்த புதிய ஐ-பேட்-2..

இந்த புதிய ஐ-பேட் 2 ல் என்னவெல்லாம் சேர்க்கப்பட்டுள்ளது என்று கேட்பவர்களுக்கு, இதோ அந்த விளக்கம்.

  • புத்தம் புதிய வடிவம்.
  • இரண்டு கமெராக்கள்.
  • Dual Core A5 chip- ப்ரொசசர்.
  • ஸ்மார்ட் கவர்(smart cover)
  • 8.8mm தடிப்பம்.
  • iOS 4.3

இந்த ஐ-பேட் 2 உடன் புதிதாக ஒரு கவர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஐ-பேட் இன் முகப்பிற்கு ஒரு பாதுகாப்பு கவசமாகவும் தேவையேற்படும் போது தாங்கிப்பிடிக்கும் ஸ்டாண்ட் ஆகவும் தொழிற்படும். காந்தப்புலம் கொண்ட இந்த புதிய ஸ்மார்ட் கவரானது பழைய ஐ-பேட் இற்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

apple-ipad-2

ஐ-பேட் 2 ன் அறிமுக விலையாக 499 அமெரிக்க டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 11ம் திகதி இந்த புதிய வகை ஐபேட் அமெரிக்க சந்தைக்கு விற்பனைக்குவிடப்படும் என ஸ்டீவ் ஜொப்ஸ் அறிவித்தார்.

நேற்று கலகலப்பாகவும் பல புள்ளிவிபரங்களையும் சொல்லிக்கொண்டு ஸ்டீவ் ஜொப்ஸ் தனது உரையினை ஆரம்பித்தார். அந்த நிகழ்வின் வீடியோவினை அப்பிள் இணைய தளத்தில் நீங்களும் பார்த்து ரசிக்கலாம்.

Recent Posts:

Related Posts with Thumbnails