அப்பிள்(Apple) நிறுவனம் தனது iphone 4 இனை வெளியிட்டு 3 வாரத்திற்குள் 3 மில்லியன் விற்பனையாகியுள்ள நிலையில், இந்த புதிய வகை iphoneல் குறைபாடு இருப்பதாக பரபரப்பான செய்திகள் வெளியாகத்துவங்கியது யாவரும் அறிந்ததே. இதன் காரணமாக அப்பிள் நிறுவனம் பல சிக்கல்களை கடந்த மூன்று நான்கு நாட்களாக எதிர்கொண்டிருந்தது. இந்த iphone விவகாரம் காரணமாக அப்பிள் நிறுவனத்தின் பங்குகளுக்கும் விலை குறைந்திருந்தது. இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அப்பிள் நிறுவனம் நேற்று ஒரு செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.அந்த சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை இங்கு பார்ப்போம்.
அப்பிள் நிறுவன துணை ஸ்தாபகரும் நிறைவேற்று அதிகரியுமான Steve Jobs தனது உரையில் , நாங்கள் ஒரு போதும் முழுமையானவர்கள் இல்லையென்றும் இந்த ஸ்மார்ட் போன்களும்(smart phone) முழுமையானவை இல்லையென்றும் கூறி தனது உரையை ஆரம்பித்தார். அப்பிள் தனது பாவனையாளர்களை மிகவும் நேசிப்பதாகவும் அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கவே அவர்கள் எப்போதும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த சமிக்ஞை பிரச்சினைக்கு தாங்கள் வழங்கும் தீர்வாக 2 தெரிவுகளை முன்வைத்தார்.
முதலாவது : இந்த குறைபாட்டினை எதிர்கொள்ளும் அனைத்து iphone 4 பாவனையாளர்களுக்கும் இலவச உறை வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.இது செப்டம்பர் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவித்தார்.
இரண்டாவது : இந்த உறை தொடர்பில் திருப்தி இல்லாத வாடிக்கையாளர்கள் தனது iphone ஐ கொடுத்து தனது முழுத்தொகை பணத்தினையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார்.
மேலும் அவர்கருத்து தெரிவிக்கையில் , இந்த குறைபாடு அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் காணப்படுவதாகவும்(உதாரணமாக Blackberry,Samsung) அது தொடர்பில் எந்த ஒரு நிறுவனமும் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர்கூறுகையில், ஒரு நிறுவனம் வளர்ச்சி அடைந்து வரும் போது அந்த நிறுவனம் விடும் சிறிய தவறினை பெரிதாக்கி பார்ப்பதே போட்டியாளர்களின் வேலை என்றும் தெரிவித்தார். இவ்வாறே கூகிள் நிறுவனத்திற்கும் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பு தொடர்பான மேலும் பல செய்திகளை அறிய இந்த முகவரிகளுக்கு செல்லவும். Apple iphone issue , apple faults to hurt Aplle’s core, Apple offers free iphone cases
Recent Posts:
- Google+ ஓர் அறிமுகம்.
- facebook’s new project : ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய Open Compute Project [உத்தியோக பூர்வமானது]
- Royal wedding:இளவரசர் வில்லியம்ஸின் திருமண இணைய தளம்
- Skype on Dialog: டயலொக் வலையமைப்புமூலமாக ஸ்கைப்
- facebook privacy : ஃபேஸ்புக் ப்ரைவசி பாதுகாப்பு முறைமைகள் [பாகம்-1]






